கலாபாரதி அகடெமி 440 யூ டியூப் வீடியோ பதிவுகள்..

30 வீடியோ பதிவுகள் தொகை நுண் கணிதத்திலும் (Integral calculus), 10 வீடியோ பதிவுகள் தாவரவியலிலும் (Transport mechanism in plants), நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதனை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மொத்த பதிவுகள் 440 ஆகி விட்டது...!!! நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனல் ஓர் கல்வி சேனல்என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மிக உயர் தரத்தில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியைத் தர வேண்டும் என்பது கலாபாரதியின் நோக்கம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்....! நமது சேனலையும் பாருங்கள். உலகப் புகழ்பெற்ற கான் அகடெமி (Khan academy- channel by renowned retired professor Salmankhan of Massachusetts Institute of Technology) சேனலையும் பாருங்கள். நாம் அறிவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நீங்களே உணர்வீர்கள்...! ஆனால் அவர்கள் ஏராளமான வீடியோ பதிவுகள் வைத்திருக்கின்றனர். நாம் குறைவாக வைத்திருக்கின்றோம். எனினும் நாமும் துரிதமாக அதிகரித்து வருகின்றோம். இதனை ஒவ்வொரு தமிழ் குடும்பத்திற்கும் தெரியப் படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கல்விக்கான செலவீனம் தமிழ் குடும்பத்தினருக்கு இனியும் தாங்க முடியாத பாரமாக இருக்கக் கூடாது. ஆட்டத்தின் போக்கினை மாற்றும் வலிய சக்தி, கலாபாரதி..... இதோ இங்கே இருக்கின்றது. தமிழத்தின் அறிவுமகள் அனிதாவின் நிகழ்வு போன்று இன்னொன்று நடக்க நாம் அனுமதிக்க கூடாது. மாணவர்களுக்கு தேர்வும் நெருங்கி வருகின்றது...! மாணவர்களுக்கு வெற்றி கிட்டட்டும்...! மக்களின் கலாபாரதியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். வாழ்த்துகள் கோடி...! அன்புடன் யோகராஜன்... கலாபாரதி அகடமி. http://www.youtube.com/c/KalabharathiAcademy

No comments: